கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இரவு நேரத்திலேயே மூன்றாம் மடியில் இருந்து கீழே விழுந்தாரா?புதிய வீடியோவால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இரண்டாம் தளத்தில் இருந்து 3 ஆம் தளத்திற்கு செல்லும் வீடியோ காட்சி வெளியாகி உள்ள நிலையில், இரவு நேரத்திலேயே பள்ளி மாடியில் இருந்து மாணவி கிழே விழுந்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது

It has been reported that the Kallakurichi schoolgirl died in the night

பள்ளி மாணவி மர்ம மரணம்- போராட்டம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் இருந்த 3 ஆம் தளத்தில் இருந்து கிழே விழுந்து மர்மமான முறையில் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிர் இழப்பிற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையிலை கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 1000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் பள்ளி வளாகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. மேலும் பள்ளியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்களை திவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

சிபிசிஐடி போலீசார் விசாரணை

மேலும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வன்முறை சம்பவம் ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, உளவுத்துறை ஐஜி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டவர்கள் இடம் மாற்றம் செய்துள்ளனர். மேலும் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் பள்ளியின் 3 ஆம் மாடியில் இருந்து மாணவியின் உடல் போன்ற பொம்மையை உருவாக்கி கீழே வீசி விசாரணை மேற்கொண்டனர். மேலும் பள்ளி மாணவியின் தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆட்சி மாறட்டும்.. தமிழ்நாடு தினம் திரும்பவும் மாறிடும்.. திமுக அரசுக்கு வானதி சீனிவாசனின் அட்வைஸ்.!

It has been reported that the Kallakurichi schoolgirl died in the night

இரவு நேரத்தில் மாணவி உயிர் இழந்தாரா?

இந்தநிலையில் 12 ஆம் தேதி இரவு நேரத்தில் பள்ளி விடுதியில் உள்ள படிப்பு அறையில் இருந்து ஶ்ரீமதி சீருடையோடு வெளியே வருகிறார். இதனையடுத்து இரண்டாம் தளத்தில் இருந்து 3 ஆம் தளத்திற்கு தயங்கி, தயங்கி மாணவி  ஏறுகிறார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. எனவே மாணவி இரவு நேரத்திலேயே மாடியில் இருந்து கிழே விழுந்து இறந்தாரா ?என்ற புதிய கேள்வி தற்போது எழுந்துள்ளது. மாணவி ஶ்ரீமதியின் தாயாருக்கு காலை 6 மணிக்கு தான் பள்ளியில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஶ்ரீமதி பள்ளியில் உள்ள விடுத்தியில் 12 ஆம் தேதி இரவிலேயே கிழே விழுந்துவிட்டார் என்ற தகவல் தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த காட்சி உண்மைதானா? என்ற கோணாத்தில விசாரணை நடைபெற்று வருகிறது. ஏனெனில் சிசடிவி காட்சியில் தேதியோ நேரமோ எதுவும் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது 

கள்ளக்குறிச்சி கலவரம்.. முன்பே எச்சரித்த மாநில உளவுத்துறை.. கோட்டைவிட்ட காவல்துறை.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios