பேனாவுக்கு ரூ.80 கோடி... பேனாவுக்கு மை நிரப்ப வருடா வருடம் எத்தனை கோடி...! ஸ்டாலினை அலறவிட்ட பாஜக

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப்போற்றும் வகையில் மெரினா கடலில் 80 கோடிக்கு பேனா சிலை வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

BJP opposes setting up pen statue in Chennai Marina

திமுகவும் - கருணாநிதியும்

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் திறம்பட செயலாற்றியவர் கருணாநிதி, தமிழக மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது எழுத்துக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு, கருணாநிதி எழுதி சிவாஜி கணேசன் பேசிய பராசக்தி வசனம் காலத்தால் அழிக்க முடியாதவை அந்த அளவிற்கு வசனம் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. இந்தநிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும், கருணாநிதி நினைவை போற்றும் வகையில், அவரது உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைத்தது. இதனையடுத்து சென்னையில் அரசு சார்பாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிலையும் அமைக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கருணாநிதியின் 100வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில்  80 கோடிக்கு பேனா சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அழுத்தம் கொடுக்கும் ஓபிஎஸ்.! இபிஎஸ்க்கு நோ சொன்ன மோடி.! பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் சென்னை வந்த எடப்பாடி

BJP opposes setting up pen statue in Chennai Marina


கடலில் பேனா சிலை

இந்த தகவல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில்,  மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும்  கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா வடிவ நினைவு சின்னத்தை பார்க்கும்  வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.   இந்த தகவல் வெளியான நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பணம் இல்லையென கூறிய தமிழக நிதி அமைச்சர் கூறிய நிலையில், கடலில் 80 கோடிக்கு பேனா எதற்க்கு என்றும் வீண் செலவு எதற்க்கு என்று  நிதி அமைச்சர் கேட்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓபிஎஸ்யின் தேனி மாவட்ட ஆதரவாளர் சையது கான்...! திடீரென டிடிவியோடு சந்திப்பு..? என்ன காரணம் தெரியுமா?

BJP opposes setting up pen statue in Chennai Marina

மை நிரப்ப எத்தனை கோடி..?

 மேலும் நாராயணன் திருப்பது வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், பேனாவுக்கு 80 கோடி. அந்த பேனாவுக்கு 'மை' நிரப்ப வருடா வருடம் எத்தனை கோடி என்பதையும் சொல்லி விடுங்கள் என கேட்டுக்கொண்டவர், இது தானே திராவிட மாடலா என கிண்டலாக பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள தடா ரஹீம் நீங்க (பாஜக) 3000 கோடிக்கு படேல் சிலை வைத்தீங்களே வருடாவருடம் அந்த சிலைக்கு முலாயம் பூச எத்துணை கோடி சொன்னீங்களா? அது போல தான் இதுவும் என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மெரீனா கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வேண்டாம்.. அதற்கு பதில் நூலகம் கட்டுங்க - பூவுலகின் நண்பர்கள்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios