“15 நாள் டைம்.. அதுக்குள்ள எல்லாம் செஞ்சு முடிக்கணும், இல்ல.? அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா வார்னிங் !”

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை, சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

bjp leader h raja warning to dmk minister sekarbabu

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டத்தில் உள்ள கும்பக்குடி, அரசங்குடி, கிளியூர், கடியா குறிச்சி, திருச்செந்துறை, கோமாகுடி உள்ளிட்ட 22 கிராமங்களும், அதேபோன்று திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்தூர், தென்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள 25,500 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என்றும்,  இந்தப் பகுதியில் பத்திரப்பதிவு கூடாது என்றும் வக்பு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.

bjp leader h raja warning to dmk minister sekarbabu

மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்த நிலையில் ஸ்ரீரங்கம் RDO வைத்தியநாதன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு வக்பு வாரியம் உரிமை கொண்டாடும் பகுதிகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம் வைத்தியநாதன் அறிவித்து நிலப் பிரச்சனைக்கு பிரச்சனைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை, சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘குச்சு வீடும் மிஞ்சும் என்ற அச்சத்தில் இந்துக்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ரபியுல்லா ஈடுபட்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..air india : ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பிய புகை.. 141 பயணிகளின் கதி என்ன ? பதறவைக்கும் வைரல் வீடியோ !

bjp leader h raja warning to dmk minister sekarbabu

நடப்பது திமுக ஆட்சியா ? அல்லது மாலிக்காபூர் ஆட்சியா ? என்ற சந்தேகம் எழுகிறது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்கள் கோயில் நிலங்கள் குறித்து சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த பட்டியலின் அடிப்படையில் இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்களை முழுமையாக சேகரித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான நிலங்கள் என தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். 15 தினங்களுக்குள் சேகர் பாபு இதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் உணர்வுள்ள இந்துக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆண்டாண்டு காலமாய் இந்து கிராமங்களில் வசித்து வரும் இந்துக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்ஃப் போர்டு சிஇஓ ரபியுல்லாவை சஸ்பெண்ட் செய்வதுடன் கைது செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் சசிகலா.. நேரம் குறிச்சாச்சு”.. எடப்பாடி பழனிசாமிக்கு திகில் காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios