“அதிமுகவில் சசிகலா.. நேரம் குறிச்சாச்சு”.. எடப்பாடி பழனிசாமிக்கு திகில் காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர் !
முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவற்றைப் பாதுகாக்கவே எங்களது ஆதரவாளர்கள் எடுத்து வந்து ஓபிஎஸ் வாகனத்தில் வைத்தார்கள் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுத தலைமைக் கழகத்தில் வன்முறை ஏற்பட்டதில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது.
அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக வீடியோ ஆதாரங்களுடன் ஈபிஎஸ் தரப்பினர் புகார் அளித்தனர். முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவற்றைப் பாதுகாக்கவே எங்களது ஆதரவாளர்கள் எடுத்து வந்து ஓபிஎஸ் வாகனத்தில் வைத்தார்கள் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக சி.வி.சண்முகம் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறி மாறி சண்டையிட்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் இருக்கிறார். அவர் தலைமையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை கிராமங்கள் தோறும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிமுகவில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்கிற ஓபிஎஸ் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் ஓபிஎஸ் பின்னால் சென்றுள்ளோம்.
மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு
ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வர அதிமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து வருகிறோம். தற்போது இரு அணிகளும் ஒன்றிணியே வாய்ப்புகள் இல்லை என்று சொன்னாலும் எதிர்காலத்தில் நிச்சயம் ஒன்றிணைவோம். அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நேரம் பார்த்துக் கொண்டுள்ளோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதற்கான வாய்ப்புகள் வரும் நிச்சயம் சசிகலா அதிமுகவில் இணைவர் என்கிற நம்பிக்கை உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் தற்போது இபிஎஸ் பின்னால் நிற்கின்றனர். ஜெயலலிதா அவர்களால் அவருடன் ஆசியால் உள்ள தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் கட்சிக்காக சிறை சென்றவர்கள் இன்று நாங்கள் ஓபிஎஸ் பின்னால் நிற்பதாகவும் இந்த மாவட்டத்தில் உள்ள இபிஎஸ் அணியினர் அதிமுக அல்ல தனியார் கம்பெனி' என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..“தமிழக கட்சிகளும் லிஸ்டில் இருக்கு”.. லெட்டர் பேடு கட்சிகளை அதிரடியாக தூக்கிய தேர்தல் ஆணையம்.!