Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜியை விமர்சித்து புகைப்படம் வெளியிட்ட பாஜக மாநில நிர்வாகி..! அதிரடியாக கைது செய்த போலீஸ்

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆவதூறு கருத்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக கூறி பாஜக மாநில நிர்வாகி செல்வக்குமாரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

BJP executive Selvakumar arrested for making defamatory comments about minister Senthil Balaji
Author
First Published Apr 12, 2023, 1:00 PM IST | Last Updated Apr 12, 2023, 1:00 PM IST

திமுக-பாஜக மோதல்

திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர்.இந்தநிலையில் பாஜகவின் மாநில அளவில் பொறுப்பில் இருக்க கூடிய செல்வக்குமார் தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அமைச்சர்களை பற்றியும், திமுக அரசை பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு தரப்பினரிடையே மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பாஜக தொழிற்பிரிவு மாநில துணை தலைவர்  செல்வக்குமார் சமூக வலைதளத்தில் கருத்தும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகார் அடிப்படையில் பா.ஜ.கவை சேர்ந்த செல்வகுமாரை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள செல்வக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.! பல்வீர் சிங் மீது வழக்கு பதியாதது ஏன்.? அரசை விமர்சிக்கும் மார்க்சிஸ்ட்

BJP executive Selvakumar arrested for making defamatory comments about minister Senthil Balaji

பாஜகவினர் மீது பொய் வழக்கு

இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்துள்ளனர்.அப்போது பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று காலை7.30  மணி அளவில் செல்வகுமாரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். டுவிட்டர் உட்பட சமூக வலைதளங்களில் பதிவு செய்வர்களை  கைது செய்வது மட்டுமே வேலையாக கோவை காவல் துறை செய்து வருகிறது. பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடுவதில் கோவை மாநகர காவல் துறை குறியாக இருக்கிறது என பாலாஜி உத்தமராமசாமி குற்றசாட்டினார். 

 

இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்

இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமாரை கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை பாஜக தொண்டர்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

கீரியும் பாம்புமாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள்.! சட்டப்பேரவையில் ஒன்றிணைந்த ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios