இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.! பல்வீர் சிங் மீது வழக்கு பதியாதது ஏன்.? அரசை விமர்சிக்கும் மார்க்சிஸ்ட்

அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணை கைதிகளின் பல்லை பிடிங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், உடனடியாக வழக்கு பதிவுசெய்திட கோரிக்கை விடுத்துள்ளார்.

The Marxist-Communist has condemned the failure to register a case against IPS officer Balveer Singh

பல் பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரி

அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணை கைதிகளின் பல்லை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்ட நிலையில் இதுவரை அந்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யாததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 40க்கும் மேற்பட்டவர்களின்  பல்லை பிடுங்கிய சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

The Marxist-Communist has condemned the failure to register a case against IPS officer Balveer Singh

வழக்கு பதியாதது ஏன்.?

பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறிழைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தினோம். இச்சம்பவங்கள் நடந்து பல நாட்கள் ஆகிறது, வெளியில் தெரிந்து இரண்டு வாரங்களுக்குள் மேல் ஆகிவிட்டது. ஆனால்,  சம்பவத்திற்கு காரணமான பல்வீர் சிங், ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.

 

சொந்த ஊருக்கு வர அஞ்சும் மக்கள்

காவல்துறை, தங்களது துறை அதிகாரிகளுக்கு சாதகமாக நடந்துகொள்வதும், பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரால் மிரட்டப்படுவதால் சொந்த ஊர் வருவதற்கு அஞ்சி வெளியூரில் தங்கி இருக்கின்றனர் என்பதும் மிகுந்த கண்டனத்திற்குரியது. எனவே, தமிழக அரசு தவறிழைத்த அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்திரவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ், டிடிவி அணியின் முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கிய எடப்பாடி..! உற்சாகத்தில் அதிமுக
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios