கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் பணியாளர்களும் அமைச்சரின் ஆதரவாளர்களும் காயமடைந்தனர். அதன் பிறகும் கோபம் அடங்காத மக்கள் அமைச்சரை ஓட ஓட விரட்டி விரட்டி தாக்கினர். அவர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஓடி தப்பித்தார்.
கிராம மக்கள் அமைச்சர், எம்.எல்.ஏ, பாதுகாப்பு அதிகாரிகளை ரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் , ஹில்சா சட்டமன்ற எம்.எல்.ஏ கிருஷ்ணா முராரி என்ற பிரேம் முகியா ஆகியோரை கிராம மக்கள் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஒரு காவலர் காயமடைந்துள்ளார்.
சமீபத்தில், பாட்னாவின் ஷாஜகான்பூர் காவல் நிலையப் பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் 9 பேர் இறந்தனர். அப்போது கிராம மக்களும் அங்கு இந்த விபத்தை நேரில் பார்த்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்திக்க அமைச்சர் ஷ்ரவன் குமார் இன்று காலை ஹில்சாவின் மாலவன் கிராமத்திற்குச் சென்றிருந்தார். அப்போது கோபமடைந்த கிராம மக்கள் திடீரென அமைச்சரை தாக்க ஆரம்பித்தனர். இதனால் பீதியடைந்த அமைச்சரும், அவரது பாதுகாவலர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். அப்போது பாதுகாப்புக்கு சென்றிருந்த போலீஸார் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிராமவாசிகள் நடத்திய தாக்குதலில் அமைச்சரின் பாதுகாவலர்களும், ஆதரவாளர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் பதற்றம் பரவியுள்ள நிலையில். அமைச்சர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ஷ்ரவன் குமார் தனது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக திட்டமிட்டபடி அந்தக் கிராமத்துக்கு சென்றார். கிராம மக்களும் அமைச்சருக்காகக் காத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் முன்னால் வந்தவுடன், கிராம மக்கள் அவரைத் தாக்கினர். அமைச்சர் தாக்கப்படுவதை அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் பாதுகாப்புப் பணியாளர்களையும் மக்கள் தாக்கினர்.

கிராமவாசிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் காயமடைந்தனர். அதன் பிறகும் கோபம் அடங்காத மக்கள் அமைச்சரை ஓட ஓட விரட்டி விரட்டி தாக்கினர். அவர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஓடி கிராம மக்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.
