Asianet News TamilAsianet News Tamil

ஜூலை 28ல் நடை பயணத்தை தொடங்கும் அண்ணாமலை..! எந்த பகுதியில் தொடங்கி எங்கே முடிக்கிறார்..? வெளியான பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ‘என் மண் என் மக்கள்’ என்கிற பெயரில் ஊழலுக்கு எதிராக நடை பயணம் மேற்கொள்ள இப்பதாக அறிவித்துள்ள அண்ணாமலை வருகிற 28ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Annamalai will go on a walk across Tamil Nadu from the 28th on the occasion of the parliamentary elections
Author
First Published Jul 12, 2023, 9:07 AM IST

நடை பயணத்தை தொடங்கும் அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  ஹாட்ரிக் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்கு சாவடி முகவர்களை நியமித்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தென் மாவட்டங்களில் தமிழகத்தில் கால் பதிக்க முடியாத பாஜகவால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக பாஜக மாநில தலைவர் தலைமையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக என் மண் என் மக்கள்’ என்கிற பெயரில் ஊழலுக்கு எதிராக நடை பயணம் மேற்கொள்ள இப்பதாக அண்ணாமலை அறிவித்திருந்தார்.

Annamalai will go on a walk across Tamil Nadu from the 28th on the occasion of the parliamentary elections

ராமேஸ்வரத்தில் தொடங்கும் பயணம்

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 28,29 ஆம் தேதிகளிலும், 30 ஆம் தேதி பரமக்குடியிலும், 31 ஆம் தேதி திருவாடானை, சிவகங்கை தொகுதியிலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பத்தூரிலும் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கன்னியாகுமரி சென்றடைகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபயணம் சென்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவுள்ளார். 

Annamalai will go on a walk across Tamil Nadu from the 28th on the occasion of the parliamentary elections

சென்னையில் முடிக்கும் அண்ணாமலை

இறுதியாக ஜனவரி மாதம் சென்னையை நெருங்கும் அண்ணாமலை, ஜனவரி 5 ஆம் தேதி ஆவடி, மாதவரம், பொன்னேரி, குமுடிப்பூண்டி என ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை முடிக்கவுள்ளார். இந்த நடைபயணத்தின் தொடங்கமாக திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த 6 மாத கால நடைபயணத்தின் போது பாஜக தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

அமெரிக்கா, லண்டனை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவிற்கு பறக்கும் அண்ணாமலை..? எப்போது.? ஏன் தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios