என்ன ஒரு வருடத்தில் ரூ.30,000 கோடி சம்பாதித்தார்களா? அண்ணாமலையின் டிவிட்டர் பதிவால் பரபரப்பு!!
திமுக பைல்ஸ் உண்டாகிய பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது மேலும் பரபரப்பை அதிகப்படுத்தும் வகையிலான ஒரு பதிவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
திமுக பைல்ஸ் உண்டாகிய பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது மேலும் பரபரப்பை அதிகப்படுத்தும் வகையிலான ஒரு பதிவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். திமுக பைல்ஸ் என்கிற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உட்பட திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
அதில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக கொடுக்கப்பட்ட லஞ்சம் ரூ.200 கோடி, கனிமொழி- ரூ.830,33 கோடி, ஜெகத்ரட்சகன் - ரூ.50,219,37 கோடி, எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி, கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581.20 கோடி, உதயநிதி ஸ்டாலின் ரூ.2,039 கோடி, சபரீசன் - ரூ.902.46, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி, ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38,827.70 கோடி என திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்த அதிமுக; பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆதரவாளர்கள்
இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் என திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சரின் தொலைப்பேசி உரையாடல் என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உதயநிதியும் சபரீசனும் ஒரே வருடத்தில் அவர்களது முன்னோர்களை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 உணவு தெருக்கள்; மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
இப்போது அது பிரச்சினையாகி உள்ளது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என சிறுக சிறுக குவித்து தற்போது தோராயமாக ஒரு 30 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களின் இருக்கும் என்று அதில் பேசுபவர் கூறுகிறார். ஏற்கனவே திமுக பைல்ஸை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலை தற்போது இந்த தொலைப்பேசி உரையாடலை பகிர்ந்து மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார்.