நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 உணவு தெருக்கள்; மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளை மேம்படுத்த நாடு முழுவதும் 100 உணவு வீதிகளை உருவாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது
மத்திய சுகாதாரச் செயலர் ஸ்ரீ ராஜேஷ் பூஷண் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலர் ஸ்ரீ மனோஜ் ஜோஷி ஆகியோர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.. அதில் “ பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை எளிதில் அணுகுவது குடிமக்களின் நல்ல ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
பாதுகாப்பான உணவு நடைமுறைகள், சரியான உணவு உண்ணுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் உணவு வணிகங்களின் சுகாதார நம்பகத்தன்மையை மேம்படுத்தும், உள்ளூர் வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்கும். இது தூய்மையான மற்றும் பசுமையான சூழலுக்கும் வழிவகுக்கிறது.
நாடு முழுவதும் சாலையோர உணவுகள் இந்திய சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சாலையோர உணவு கடைகள், மில்லியன் கணக்கான மக்களுக்கு மலிவு விலையில் தினசரி உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஏராளமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது.. மேலும், அவை சுற்றுலாத் தொழிலையும் ஆதரிக்கின்றன. ஆனால் சாலையோர உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. குறிப்பாக சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் சிக்கலை மோசமாக்கியுள்ளது.
எனவே மத்திய சுகாதார அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் இணைந்து உணவு தெரு என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.. சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் வரும் இதுபோன்ற தெருக்களுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கும் ஒரு முன்னோடி திட்டமாக இது இருக்கும்.. பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.. இதனால், உணவினால் பரவும் நோய்களைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
Watch : தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்களை காலில் விழ வைத்த பாஜக அமைச்சர்!
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் FSSAI இன் தொழில்நுட்ப ஆதரவுடன் தேசிய சுகாதார இயக்கம் மூலம் இந்த தனித்துவமான முயற்சி செயல்படுத்தப்படும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு, இந்த முன்முயற்சிக்கான நிதி உதவி வழங்கப்படும்.. ஒவ்வொரு உணவு தெரு அமைக்க, ஒரு மாநிலத்திற்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.. நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் இதுபோன்ற 100 உணவு தெருக்கள் உருவாக்கப்படும்.. இந்த உணவுத் தெருக்களுக்கு FSSAI வழிகாட்டுதல்களின்படி நிலையான அங்கீகாரம் வழங்கப்படும்.
மாநில அளவில் உள்ள மாநகராட்சிகள்/வளர்ச்சி ஆணையங்கள்/ மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றிணைவதை உறுதி செய்ய முக்கிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAYNULM), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஒரு அங்கமான "நகர்ப்புற தெரு வியாபாரிகளுக்கான ஆதரவு (SUSV)" போன்ற திட்டங்களும் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தெருவோர வியாபாரிகளுக்குப் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கழிவுகளை அகற்றுதல் போன்ற பயிற்சித் திட்டங்களை நடத்தலாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் முதல் தேஜஸ் வரை; நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் பெயர்கள் மாற்றம்!!