சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக தொழிலாளி… வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உதவிக்கோரிய அண்ணாமலை!!
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழக தொழிலாளி விபத்தில் உயிரிழந்ததை அவரின் உடலை தமிழகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவிகோரியுள்ளார்.
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழக தொழிலாளி விபத்தில் உயிரிழந்ததை அவரின் உடலை தமிழகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவிகோரியுள்ளார். இதுக்குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த நிலையில் 10.02.2023 அன்று விபத்தில் உயிரிழந்தார். திருமுருகனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்.! 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.! திமுகவினரை அலறவிடும் அண்ணாமலை
சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே NOC வழங்கிவிட்டது. அனைத்து நடைமுறைகளையும் முடித்த போதிலும், இன்னும் அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பப்படவில்லை. இந்த விஷயத்தில் உங்கள் தலையீடு வேண்டும். உடலை இந்தியாவுக்கு அனுப்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இந்திய தூதரகத்தை கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை விட எனது மனைவி ஆயிரம் மடங்கு பவரானவர்: அண்ணாமலை அதிரடி!!
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், சவூதி அரேபியாவின் அஃபீஃப் பகுதியில் விபத்தில் திரு முருகன் துரதிர்ஷ்டவசமாக இறந்தது தொடர்பாக மார்ச் 5, 2023 தேதி அனுப்பிய கடிதத்தை பார்த்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 08 மார்ச் 2023 அன்று உடல் AI922/AI667 மூலம் திருவனந்தபுரத்தை அடையும் என்று தெரிவித்துள்ளதாக பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.