Asianet News TamilAsianet News Tamil

Annamalai : ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடம்.. பாஜக நிரப்பி வருகிறது- அண்ணாமலை அதிரடி

ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை மக்கள் மத்தியில் வெளிப்வெளிப்படையாக காட்டியதாக தெரிவித்த அண்ணாமலை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு, மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்தியும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக தனித்து நின்றதாக கூறினார்.

Annamalai has said that BJP will fill the void left by Jayalalithaa death KAK
Author
First Published May 24, 2024, 8:17 AM IST

தென் மாநிலங்களில் பாஜக

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 6ஆம் கட்ட தேர்தல் டெல்லியில் நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியில் பாஜகவிற்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தவர், 

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் 17 இடங்களில் 9 இடங்களைத் தாண்டும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என கூறினார். 

இந்து அடையாளத்தை காட்டிய ஜெயலலிதா

ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை மக்கள் மத்தியில் வெளிப்வெளிப்படையாக காட்டியதாக தெரிவித்த அண்ணாமலை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு, மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்தியும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக தனித்து நின்றதாக கூறினார். இதனால் 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்ததாக தெரிவித்தார். 

இந்தநிலையில் தான் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டதாகவும், இதன் காரணமாக அந்த இடத்தை நிரப்ப பா.ஜனதாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா மிகப்பெரிய இடத்தைப் பிடித்தது என அண்ணாமலை கூறினார். 

என்னது! மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமா? ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு குற்றச்சாட்டு தரமான பதிலடி கொடுத்த எல்.முருகன்!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios