Asianet News TamilAsianet News Tamil

5 ஆண்டில் டி.ஆர் பாலுவின் சொத்து மதிப்பு 350% உயர்ந்திருக்கு.! மக்கள் வாழ்வாதாரம் என்ன ஆச்சு.? அண்ணாமலை கேள்வி

பொய் பேசுவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கவேண்டும் என்றால் அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும் என தெரிவித்த அண்ணாமலை, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை 20% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களிடம் பொய் கூறுகிறார்கள் என தெரிவித்தார். 

Annamalai has criticized TR Balu wife property value increased by 350% in 5 years KAK
Author
First Published Mar 29, 2024, 12:40 PM IST

அண்ணாமலை பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

அந்தவகையில்  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்ககோரி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே மணிகுண்டு  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்  மேற்கொண்டார்.

Annamalai has criticized TR Balu wife property value increased by 350% in 5 years KAK

பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு சிறந்த பரிசு

அப்போது திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்களிலும் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், பொய் பேசுவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கவேண்டும் என்றால் அது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்.  திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருவதாகவும் விமர்சித்தார். திமுக செய்த சாதனையே 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது மட்டுமே என கூறிய அவர் நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான் என குற்றம்சாட்டினார். 

Annamalai has criticized TR Balu wife property value increased by 350% in 5 years KAK

டி.ஆர்.பாலு சொத்து மதிப்பு 350% அதிகரிப்பு

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை 20% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களிடம் பொய் கூறுகிறார்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். திமுக தற்போது நடப்பது  கவுன்சிலர் தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறது,  அதிமுக மாநில தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறார்கள், மத்தியில் யாரு ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை எனவும் விமர்சித்தார்.  திமுக வெற்றி பெற்றதால்  திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% சொத்து உயர்ந்துள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, எனவே திமுகவினரின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர மக்களின் வாழ்வாதாரம் உயராது என கூறினார். 

இதையும் படியுங்கள்

சூடு பிடிக்கும் தேர்தல் களம்... அரசியல் கட்சி தலைவர் எந்த, எந்த தொகுதியில் இன்று சூறாவளி பிரச்சாரம் தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios