திமுக தேர்தல் அறிக்கையில் 505 ஊசிப்போன வடைகள்.! ஸ்டாலின் அரசின் திட்டங்களை விளாசும் அண்ணாமலை

 தமிழகத்தில் 33 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 22 கல்லூரிகள் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டவை. இந்த கல்லூரிகள் அமைவதற்கு திமுக பணம் பெற்றுள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, இதனால் தான் மாணவர்களை போராட தூண்டுவதாக கூறினார். 

Annamalai has criticized that corruption has increased in the DMK regime

அண்ணாமலை பாதயாத்திரை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையிலுள்ள பெல் மைதானம் அருகே தனது நடைபயணத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு பாஜகவினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக உறுப்பினருமான புவனேஸ்வரி, பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து பாளையங்கோட்டை மார்க்கெட் சாலை வழியாக சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து தெற்கு பஜார் வழியாக ராஜகோபாலசுவாமி கோயில் திடலுக்கு வந்த அண்ணாமலை தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார்.

Annamalai has criticized that corruption has increased in the DMK regime

திமுகவின் 505 ஊசிப்போன வடைகள்

ராமநாதபுரத்தில் மீனவர்கள் நல மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் வடை சுட்டதாக தெரிவித்திருக்கிறார். கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் 505 ஊசிப்போன வடைகள் இருப்பதை ஞாபகப்படுத்துவதாகவும் விமர்சித்தார்.  பாஜக ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியிரப்பதாகவும்,  24 விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டும் 47 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. விவசாய நலன் சார்ந்த திட்டங்களுக்கு மட்டும் ரூ.1872 கோடியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதரவு விலை ரூ.1310-ல் இருந்து 2183 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறினார்.  

Annamalai has criticized that corruption has increased in the DMK regime

நெல்லை மாநகராட்சியில் ஊழல்

மத்திய அரசு நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் கமிஷன் வாங்குகிறார்கள். பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை 8 மாதத்திலேயே கீழே விழுந்தது. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள திமுக கவுன்சிலர்களில் 40 பேர் மாநகராட்சி மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எந்த திட்டமானாலும் மேயர் 30 சதவிகிதம் கமிஷன் கேட்பதாகவும், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதாகவும் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் ஊழல் மலிந்துள்ளதை இந்த நிகழ்வு காட்டுவதாக கூறினார். . மதுபாட்டில்கள் உற்பத்தியாவதில் இருந்து அவற்றை விற்பனை செய்வது வரையில் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி சொல்கிறார். ரேஷன் அரிசி மூடை மூடையாக கடத்தப்படுகிறது. இதை தடுக்க கிட்டங்களிலும், கடைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மேயர்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios