மோடியை வரவேற்க யார் யாருக்கு அழைப்பு.? ஓபிஎஸ்க்கு சிறப்பு அழைப்பா.? அண்ணாமலை அதிரடி
பெருமழை தொடர்பாக வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் கூட பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள் என அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
தூய்மை பணியில் அண்ணாமலை
திருச்சியில் இன்று புதிய பன்னாட்டு விமான முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா பிரதமர் மோடி பங்கேற்கிறார்.பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் வரவேற்க்க உள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி பாஜகவினர் திருச்சியில் குவிந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக காந்தி மார்க்கெட் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருச்சிக்கு பிரதமர் வரும் நேரத்தில் இன்றைய நாளில் 75 இடங்களில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், தலைவர்கள் , இளைஞர் அணி தலைவர் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஓபிஎஸ்க்கு அழைப்பு ஏன்.?
தமிழ்நாடு அரசு குப்பைகளை அகற்றி மீண்டும் உரமாக மாற்றி பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். அதிகமான குப்பை கிடங்குகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகளை அகற்றாமல் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பிரதமர் இன்று திருச்சிக்கு வரும் பொழுது முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர் என்றஅடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு அளிக்க இருப்பது தெரிவித்தார். பிரதமரை வரவேற்க முக்கிய தலைவர்கள் விரும்பினால் அவர்கள் வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
முன்னெச்சரிக்கை எடுக்காத தமிழக அரசு
தமிழகத்தில் மிக முக்கியமாக இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் கூட பணியில் ஈடுபடாமல் இருந்ததாக குற்றம்சாட்டியவர், இது தமிழ்நாடு அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என கடுமையாக அண்ணாமலை விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
திடீரென உயர்ந்த தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் வெண்டைக்காய், முருங்கைக்காய் விலை என்ன தெரியுமா.?