பிரதமர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட என் மண் என் மக்களின் யாத்திரை நிறைவு விழா தேதி திடீர் மாற்றம்
சென்னையில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நிறைவு விழா தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது அவர் மேடையில் பேசுகையி்ல், என் மண் என் மக்கள் யாத்திரையில் 200 தொகுதிகளை தாண்டி இன்று சென்னையில் நின்று கொண்டு இருக்கின்றோம். யாத்திரை என்றால் மாறுதல் என்று பொருள். பாஜக யாதிரையால் வளர்ந்த கட்சி. தமிழகத்தில் என் மண் என் மக்கள் மூலம் ஒவ்வொரு இடத்திலும் மக்களை சந்தித்து வருகிறோம். மிகவும் நுணுக்கமான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.
காற்று எப்டிவீசினாலும்,யார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீதி துறை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என நமது நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. 2022 ஆம் ஆண்டு பிரதமர் உரையில் இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களின் தாய் மொழிகளுக்கு ஏற்றவாறு நீதிமன்ற வழக்காடு மொழிகளை கொண்டு வரவேண்டும் என பேசியுள்ளார். உச்சநீதிமன்றமும், அரசும் இணைந்து வழக்காடு மொழிகளாக அவரவர்களின் தாய் மொழியை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறோம்.
கேட்ட சீட்டு கிடைக்காவிட்டாலும் திமுக உடனான கூட்டணி தொடரும் - துரை வைகோ
மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களின் மீது ஒரு தரப்பினர் தொடர்ந்து வழக்கு தொடுக்கின்றனர். புதிய நாடாளுமன்றம், ரபேல், பணமதிப்பிழப்பு, பெகாசஸ் போன்று பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிப்பட்டுள்ளது. பாஜக புதுமையாக கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். டெல்லியில் பார்கவுன்சிலுக்கு ரூ.100 கோடி அம்மாநில அரசு வழங்கி உள்ளது. அதுபோல 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் வழக்கறிஞர்களின் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோவில் பிரதிஷ்டை மூலம் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும். இதன் மூலம் அம்மாநில அரசிற்கு ரூ.25 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்றார்.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்; தஞ்சையில் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இதுவரைக்கும் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. முறையான நேரத்தில் அதற்கு உரியவர்களால் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். "தேர்தல் பத்திரம்" தகவல் அறியும் சட்டத்திற்கு எதிராக உள்ளதால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது. பத்திரம் மூலமாக பஜகவிற்கு 52 சதவீதம் நிதி பெறப்படுகிறது. பத்திரம் மூலமாக திமுகவிற்கு 91 சதவீதம் நிதி பெறப்படுகிறது. தேர்தல் செலவுகளை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் பத்திரம் முறை கொண்டுவரப்பட்டது.
திமுகவிற்கு தமிழகத்தில் இருந்து மட்டும் 600 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கிடைத்துள்ளது. பாஜக ஒரு மாநிலத்தில் சராசரியாக 220 கோடி ரூபாய் தான் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்ததை முழுமையாக ஏற்கிறோம். ஆனால் இதில் மாற்றங்கள் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற பாஜக முயற்சி செய்யும்.
என் மண், என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது உறுதி. ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் இருப்பதன் காரணமாக பிரதமர் கலந்து கொள்ளும் தேதி மாற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதிற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. இதனை திமுகவினர் வாய் திறந்து சொல்ல மாட்டார்கள்.
திமுகவால் தான் தமிழகம் தேய்ந்து போகிறது. திமுகவால் தான் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. கோபாலபுரம் குடும்பத்தால் தான் தமிழகம் அழிகிறது. தமிழகத்தின் முதல் குடிமகன்களாக தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பெறும் முதல் நபர்களாக மாற்றுத்திறனாளிகள் இருப்பார்கள். 2026ல் பாஜக தேர்தல் அறிக்கையாகவும் இது இருக்கும் என்றார்.