உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 147 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். 125 இந்தியர்களும் 25 வெளி நாட்டவர்களும் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  அதன்படி, தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31 ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கிப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக பெரிய கடைகள் போன்றவையும் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளாட்பார டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு..! ரயில்வே வாரியம் அதிரடி..!

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே தீர்வு முழு அடைப்பு தான் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனாவால் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று கூறியுள்ளார். கொரோனாவை எதிர்கொள்ளும் அளவிற்கு மருத்துவ கட்டுமானம் நம் நாட்டில் இல்லை என்ற அன்புமணி முழு அடைப்புத்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்றார். மேலும் வணிகமாக உயிரா என்றால் உயிர் தான் முக்கியம், வணிகத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே நாளில் 862 பேர் உயிரிழப்பு..! 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி..!