Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் 862 பேர் உயிரிழப்பு..! 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி..!

உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரையிலும் 7,984 பேர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. 1,90,214 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதில், 82,762 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

862 people died in a single day due to corona
Author
China, First Published Mar 18, 2020, 10:44 AM IST

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,237 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரையிலும் 7,984 பேர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. 1,90,214 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதில், 82,762 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

862 people died in a single day due to corona

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 2,503 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,980 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்து அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 18 ஆயிரம் அபராதம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனா, இத்தாலிக்கு அடுத்து ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர்.

பிளாட்பார டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு..! ரயில்வே வாரியம் அதிரடி..!

862 people died in a single day due to corona

இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 147 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். 122 இந்தியர்களும் 25 வெளிநாட்டினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நேற்று மஹாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவிற்கு பலியான நிலையில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios