உர மானியம் பெறும் உழவர்களின் சாதி பிரிவை கேட்ட விவகாரம்... அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

உர மானியம் பெறும் உழவர்களின் சாதிப்பிரிவை கேட்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

anbumani ramadoss condemns asking caste from farmers receiving fertilizer subsidy

உர மானியம் பெறும் உழவர்களின் சாதிப்பிரிவை கேட்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில், மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் (பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று  நடுவண் உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை.

இதையும் படிங்க: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது  உர மானியம் வழங்குவதற்கான சாதிப் பிரிவுகளை கோருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நடுவண் அரசின் இந்த விதி உழவர்களை காயப்படுத்தியுள்ளது. உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க நடுவண் அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற ஐயம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்... அண்ணாமலை சாடல்!!

உழவர்களின் இந்த  ஐயத்தை உடனடியாக போக்க வேண்டியது நடுவண் அரசின் கடமை. உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நீக்க நடுவண் அரசு நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios