2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்... அண்ணாமலை சாடல்!!

2024 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். 

its difficult for thirumavalavan to get deposit in 2024 lok sabha elections says annamalai

2024 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். இந்த வெற்றி திமுக-வின் 23 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல. 2024 ஆம் ஆண்டு தேர்தல் களம் முற்றிலும் வேறுப்பட்டது. பிரதமர் மோடியை மையமாக வைத்தும் நடக்கும் தேர்தல். திமுக கூட்டணியிலுருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்து விட்டார். ஒரு வாரமாக அவர் ஏன் பிதற்றுகிறார் என தெரியவில்லை. பட்டியல் இன மக்கள் பாஜக-விற்கு அதிகமாக வருகிறார்கள். திமுகவும் விசிக-வை கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்து விட்டதை போல் தான் தெரிகிறது.

இதையும் படிங்க: பேரத்தை உயர்த்த செய்யும் சூழ்ச்சி தான் அவ்வளவும்... பாமகவின் தேர்தல் தந்திரத்தை போட்டுடைத்த திருமாவளவன்!!

ஆரம்ப கால அறிகுறிகள் தெரிகிறது. திருமாவளவன் கண் முன்னால் அவர் கோட்டை என கூறப்படும் கடலூரில் பாஜக வளர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம். யாரையும் அரவணைப்பது என் கடமையல்ல. 2021க்கு முன்பு எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. நான் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஒரு கட்சி இன்னொரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என கூறினால் அது ஜனநாயகமாக இருக்காது. நான் பாஜகவின் தலைவராக இருக்கும் வரை மற்ற கட்சியின் பிரச்சனையில் பாஜக தலையீட கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன்.

இதையும் படிங்க: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

அதிமுகவில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல. பிரதமர் மோடியை விஷ்வகுருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கசாப்பு கடைக்கு செல்வதற்கு முன் ஆட்டை பிடித்து பார்த்தது போல் தான் உதயநிதி பிரதமரை சந்தித்தது. பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் என நினைப்பது தவறு, அரசுக்கு எதிரான மன நிலை மக்களுக்கு இருக்கும். அதுனால் தான் அதிமுக 2021ல் தோல்வி அடைந்தது. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 2024 லிருந்து 2026 வரை மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். 2024 தேர்தல் பாஜகவிற்கானது. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி தினமும் பாஜகவை விமர்சிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios