Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 35-ஆவது பலி.! ஆளுனர் இனியும் தாமதிக்க கூடாது..!அன்புமணி ஆவேசம்

ஆன்லைன் சூதாட்டம் கடந்த காலங்களை விட மிக அதிக வேகத்தில் உயிர்களை பலிவாங்கத் தொடங்கியுள்ள நிலையில், அதை தடை செய்வதற்கான சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

Anbumani insisted that the governor should approve the bill immediately as one more person died due to online gambling
Author
First Published Dec 9, 2022, 12:33 PM IST

ஆன்லைன் சூதாட்டம்- இளைஞர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக ஆளுநர் உடனடியாக தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பொள்ளாச்சி அருகிலுள்ள கிணத்துக்கடவு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சல்மான். இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்த சல்மான், அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆன்லைனில் சூதாடி இழந்ததாகக் கூறப்படுகிறது.  அதன் பிறகும் ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து மீள முடியாத  சல்மான், அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடியிருக்கிறார். இவ்வாறாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சல்மான், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Anbumani insisted that the governor should approve the bill immediately as one more person died due to online gambling

ஆன்லைன் சூதாட்டம்- 100 தொட்ட தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில்  இயற்றபட்ட சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதன்பின்னர் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 35 ஆகும். கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கும் நிலையில், அதை தடை செய்வதற்கான முயற்சிகள் இன்னும் வெற்றி பெறவில்லை என்பது தான் மிகுந்த வேதனையளிக்கிறது.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை-இபிஎஸ்யை விளாசிய ஸ்டாலின்

Anbumani insisted that the governor should approve the bill immediately as one more person died due to online gambling

படையெடுக்கும் ஆன்லைன் சூதாட்டம்

தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 18-ஆம் தேதி, அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்டம் இயற்றப்பட்டது. அதன்பின் 53 நாட்களாகி விட்ட நிலையில் இன்று வரை ஆன்லைன் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒருபுறம் அவசர சட்டம் காலாவதியாகி விட்டது, மறுபுறம் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் ஆன்லைன் சூதாட்டங்கள் முழு வீச்சில் தொடங்கியிருக்கின்றன. கோடிக்கணக்கில் பரிசுகளை வெல்லலாம் என்று ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரங்களைச் செய்வதால் விட்டில் பூச்சிகளைப் போல மீண்டும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆளுநரை சந்தித்த ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள்..! திடீர் ஆலோசனை.? என்ன காரணம் தெரியுமா..?

Anbumani insisted that the governor should approve the bill immediately as one more person died due to online gambling

உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்

ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி காலாவதியான பின்னர், 10 நாட்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளின் வேகம் அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதன் மூலமாக மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை தடுக்க முடியும்.  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக  ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து தமிழக மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரை கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டம்..! பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு இளைஞர் தற்கொலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios