Asianet News TamilAsianet News Tamil

இனி டிவி விவாதங்களில் இவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.. பட்டியலை வெளியிட்ட டிடிவி. தினகரன்..!

தமிழகத்தில் பெரும்பாலான ஊடகங்களில் தினசரி விவாத நிகழ்ச்சிகள் நடந்தி வருகின்றன. இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்துகொள்கையில் சிலநேரம் கட்சிக் கருத்துகளையும் மீறி, தங்கள் சொந்தக் கருத்துகளையும் தெரிவித்து விடுகின்றனர். 

AMMK spokespersons list release... ttv dhinakaran announcement
Author
First Published Aug 26, 2022, 6:42 AM IST

அமமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் தொடர்பான பட்டியலை அமமுக பொதுச்செயலாளர்  டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான ஊடகங்களில் தினசரி விவாத நிகழ்ச்சிகள் நடந்தி வருகின்றன. இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்துகொள்கையில் சிலநேரம் கட்சிக் கருத்துகளையும் மீறி, தங்கள் சொந்தக் கருத்துகளையும் தெரிவித்து விடுகின்றனர். இது அரசியல் கட்சியினருக்கு தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளுமே ஊடக விவாதங்களில் கலந்துகொள்வதற்கு என தனியாக குழு வைத்துள்ளது. இந்நிலையில், அமமுக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்கும் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- கொஞ்சம் கூட மதிக்காத எடப்பாடி பழனிச்சாமி.. ஓபிஎஸ் பக்கம் தாவப்போகும் செல்லூர் ராஜூ..?

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்  தன் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன்,  திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன், நடிகையும், கொள்கை பரப்பு செயலாளருமான சி.ஆர்.சரஸ்வதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ தொட்டியம் ராஜசேகரன், கழக அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, கழக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கோமல் அன்பரசன், கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நல்லதுரை, மதுரை  மாநகர் வடக்கு மாவட்டம் வீரவெற்றி பாண்டியன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் குரு முருகானந்தம் ஆகிய 9 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேற்கண்டவர்கள் மட்டுமே இனி ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் கலந்து கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  திமுக MLA வீட்டு காது குத்து, கறி விருந்து.. 11 கோடி மொய் வசூல், கருப்பு வெள்ளையாக்கப்பட்டதாக அண்ணாமலை புகார்.

Follow Us:
Download App:
  • android
  • ios