AIADMK : அமமுக முக்கிய புள்ளிகள் அதிமுகவுக்கு தாவினர்..டிடிவி தினகரன் அதிர்ச்சி !
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் இணையும் விழா கூட்டம் நடைபெற்றது.
இந்த தொழிற்சங்கம் இணையும் விழாவில் அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் தலைமையில் அதிமுகவின் தொழிற்சங்கத்தில் இணைத்துக்கொண்டனர். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பு, ‘அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதையும் படிங்க :ஸ்டாலின் ஆட்சி நம்பர் 1.. அப்போ கலைஞர் ஆட்சி நல்லா இல்லையா ? உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை
அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், அமமுகவின் இதய தெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் வியாசர்பாடி என்.ராஜீ தலைமையில் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் அமைப்புசாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமான சங்கத்தினர் உள்ளிட்டோர் இணைந்தனர்.போக்குவரத்துக் கழக மதுரை மண்டல அமமுக தொழிற்சங்கத்தின் எஸ்.சரவணன், டி.செல்வராஜ், வி.செந்தில், ஆர்.கவிராஜன் ஆகியோர் இணைந்தனர்.
மேலும், திருவண்ணாமலை மண்டல அமமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்டோரும் இணைந்தனர். சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களை சேர்ந்த அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மொத்தம் 120 பேர் நேற்று அதிமுக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் ஆர்.கமலக்கண்ணன் செய்திருந்தார்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :"புலி வருது, புலி வருது.. பூனை கூட வராதுங்க !"- அண்ணாமலையை அட்டாக் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி