அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் போறாங்க.. அலறி துடித்து மனு தாக்கல் செய்த மனைவி

தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

Amar Prasad Reddy wife filed a petition in court seeking to prevent arrest under the Goondas Act

அமர் பிரசாத் ரெட்டி கைது

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், JCB இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும்,  மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை அக்டோபர் 21ம் தேதி  கானத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து போக்குவரத்து போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டது. உலக செஸ் சாம்பியன் சிப் போட்டி விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை மறைத்தது ஆகிய வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். 

Amar Prasad Reddy wife filed a petition in court seeking to prevent arrest under the Goondas Act

அடுத்தடுத்து வழக்கில் கைது

இந்தநிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறையினர் முயற்சிப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்கக் கோரி, அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், JCB இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுக-வின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால், தனது கணவர் மீது பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Amar Prasad Reddy wife filed a petition in court seeking to prevent arrest under the Goondas Act

குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டம்

மேலும், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார்   கூறியதால் , அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.  தனது கணவர் அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amar Prasad Reddy wife filed a petition in court seeking to prevent arrest under the Goondas Act

ஒரு நாள் போலீஸ் காவல்

இதனிடையே அண்ணாமலை இல்லத்தில் நடந்த மோதல் தொடர்பாக அமர்பிரசாத் ரெட்டியிடம் விசாரணை நடத்த இரண்டு நாட்கள் அனுமதி கோரி போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அமர்பிரசாத் ரெட்டியை விசாரணைக்காக போலீசார் அழைத்து செல்லவுள்ளனர். 

இதையும் படியுங்கள்

ஆளுநர் ரவி பாஜகவினராகவும், ஆளுநர் மாளிகை பாஜக கட்சி அலுவலகமாகவும் மாறிவிட்டது... வெட்கக்ககேடு- சீறும் ஸ்டாலின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios