அண்ணாமலை பெயரை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதித்த அமர் பிரசாத் ரெட்டி.. சீறும் சூர்யா சிவா

திருச்சி

பெண்களை மதிக்காதோருக்கு, பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு பாஜகவில் இடமில்லையென சூர்யா சிவாவை விமர்சித்து அமர் பிரசாத் ரெட்டி கருத்து தெரிவித்த நிலையில், , அண்ணாமலையின் பெயரை வைத்து ஊரில் இருக்கும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதித்தவர்கள் எல்லாம் பேசக்கூடாது என சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார். 
 

Amar Prasad Reddy made money by threatening businessmen with the name of Annamalai says Surya Siva

பாஜகவில் சூர்யா சிவா

திமுக மூத்த நிர்வாகியும், மாநலங்களவு உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மீது கொண்ட அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அண்ணாமலையின் நம்பிக்கைக்குரிய நபராகவே சூர்யா சிவா செயல்பட்டு வந்தார். இந்த காலகட்டத்தில் பாஜகவில் பதவி வழங்குவது தொடர்பாக மாநில நிர்வாகி டெஸ்சி அருளை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 6 மாத காலம் கட்சி பணிகளில் கலந்து கொள்ள சூர்யா சிவாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியில் விருந்து விலகுவதாக அறிவித்த சூர்யா சிவா வெளியில் இருந்து அண்ணாமலையின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். 

Amar Prasad Reddy made money by threatening businessmen with the name of Annamalai says Surya Siva

அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும்

இந்தநிலையில் திடீர் பல்டி அடித்து அண்ணாமலைக்கு எதிராக டுவிட்டர் வெளியிட்ட சூர்யா சிவா, அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் வெளியே வரும் என கூறியிருந்தார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதவில்,  கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன் வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும் நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்

 

பாலியல் சீண்டலில் ஈடுபட்டோருக்கு இடமில்லை

இதனையடுத்து பாஜக நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பெண்களை மதிக்காதோருக்கு, பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு, எப்போதும் போதையில் மிதப்போருக்கு, அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுப்போருக்கு, திமுகவுடன் கள்ள உறவு வைத்திருப்போருக்கு என்றுமே பாஜகவில் இடமில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு! என தெரிவித்துள்ளார். 

 

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூர்யா சிவா பதிலடி கொடுத்து டுவிட்டர் வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாமலையின் பெயரை வைத்து ஊரில் இருக்கும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதித்து சோறு திங்கும் நாய்கள் எல்லாம் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதை பற்றி பேசக்கூடாது உதயநிதியிடம் எத்தனை முறை நீ சந்தித்து இருக்கிறாய் என்னென்ன அவரிடம் ஆதாயம் பெற்று இருக்கிறாய் என்பதை முதலில் சொல்லு என சூர்யா சிவா கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும்..! திடீரென பாஜகவிற்கு எதிராக களம் இறங்கிய திருச்சி சூர்யா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios