நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக, அறப்போர் இயக்கம் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Allegations of corruption in the food department: மத்திய, மாநில அரசுகள் கூட்டாக உணவுத்துறையில் முறைகேடு புரிந்துள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2024 ஜூனில் ரேஷன் துறை போக்குவரத்து டெண்டரில் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும், கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்களுக்கு, சந்தை மதிப்பை விட 107% அதிகமாக டெண்டர் வழங்கி உள்ளன.

இதன்மூலம், ரூ.992 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. பாஜக மீண்டும் 2024 இல் ஆட்சிக்கு வந்த முதல் 1 மாதத்திற்குள் நடந்த முறைகேடாகும். இது குறித்து 40 பக்க புகார் மற்றும் 565 பக்க ஆதாரங்களை, அறப்போர் இயக்கம் சிபிஐ, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, முதல்வர் ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில உணவு துறை அமைச்சர்கள், உணவுத்துறை செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளோம்.

கடந்த 2020ஆம் ஆண்டு வரை, நெல் போக்குவரத்தை அந்தந்த ஊரில் உள்ள லாரி உரிமையாளர்கள்தான் செய்து வந்தனர். அவர்கள் 5 கி.மீ. தூரத்திற்கு 1 மெட்ரிக் டன் நெல் போக்குவரத்தை ரூ.200-ரூ.250 கட்டணத்திற்கு செய்து வந்தனர். 2020ஆம் ஆண்டில் இதற்கான டெண்டரில், 5 கி.மீ.க்கு ஒரு டன்னுக்கு கிட்டத்தட்ட ரூ.640 க்கு கிறிஸ்டி ஃப்ரைடு கிராம் குழு நிறுவனமான ஜின்க் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் வழங்கியது.

Bitumen : 750 கோடி மதிப்பிலான BITUMEN மோசடி.. 1131 அதிகாரிகளுக்கு எதிராக புகார் - கொதிக்கும் அறப்போர் இயக்கம்!

இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரிக்க சொல்லி கூறி இருந்தோம். அதையடுத்து, இந்த டெண்டர் 3 வருடங்களில் அரசால் ரத்து செய்யப்பட்டது. ஜூலை 2023 முதல் ஜூன் 2025 வரை தானியங்களை கொண்டு செல்ல, ஜூன் 2023இல் மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இதில், பட்டியல் விலையை விட 107% அதிக விலையில் டெண்டர் வழங்கப்பட்டது. டெண்டர் விதிகளையும் மீறி ஒப்பந்தம் நடந்துள்ளது. இவ்வாறு அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

உணவுத் துறையில் டெண்டர் விடுவதில் விதிமீறல் மூலம் முறியகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.
அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு மீது விசாரணை: அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!