உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.
பொதுக்குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து தூக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை பதவியில் நியமித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி (நாளை மறுநாள்) அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்கும் பணி தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்த அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுகவில் தற்போது இரு துருவங்களாக பிரிந்துள்ள முன்னாள் முதல்வர்கள் ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி அணி சார்பாக பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் ஒபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூம் எடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !