Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அலுவலக சாவி விவகாரம்.. இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன் பட்டியலிட்டு விசாரிக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

AIADMK office key case; Hearing soon - Supreme Court
Author
First Published Aug 10, 2022, 1:10 PM IST

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன் பட்டியலிட்டு விசாரிக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்.  மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  

இதையும் படிங்க;- ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து திமுகவிற்கு பணம்..! எவ்வளவு வருகிறது தெரியுமா..? பகீர் கிளப்பிய இபிஎஸ்

AIADMK office key case; Hearing soon - Supreme Court

இது தொடர்பாக வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க;-  இபிஎஸ் சுற்றுப் பயணம்- ஓபிஎஸ் களத்துக்கே வரல, அதுக்குள்ள இப்படியா ? வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

AIADMK office key case; Hearing soon - Supreme Court

இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன் பட்டியலிட்டு விசாரிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios