ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து திமுகவிற்கு பணம்..! எவ்வளவு வருகிறது தெரியுமா..? பகீர் கிளப்பிய இபிஎஸ்
ஆன் லைன் சூதாட்டத்திற்கு திமுகவிற்கு பணம் வருவதன் காரணமாகவே தடை விதிக்க மறுப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தொண்டர்களை சந்திக்கும் இபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை சந்தித்து வருகிறார். நேற்று முன் தினம் பழனியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் தொண்டர்களை சந்தித்தார். இதனையடுத்து நேற்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொண்டர்களின் ஆதரவை திரட்டினார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இபிஎஸ், எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அதிமுகவை பல மடங்கு உயர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய 3-வது கட்சியாக மாற்றி காட்டினார் எனவே, காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாதோ அது போல் தான் அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கூறினார் .வீட்டு வரி 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் மற்றும் வீட்டு வரி, சொத்து வரி ஆகியவற்றையும் திமுக அரசு உயர்ந்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் திமுகவிற்கு பணம்
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பதாக தெரிவித்தவர், ஆன் லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்து,அப்படி இருக்கும் போது மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என தெரிவித்தார். ஆன் லைன் சூதாட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.20ஆயிரம் கோடி வருமானம் வருவதாகவும், அதில் சில பகுதிகள் திமுகவினருக்கு கிடைப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் எந்த பிரச்சனை நடைபெற்றாலும் அதற்க்கு குழு அமைப்பது தான் ஸ்டாலின் வேலையாக இருப்பதாக கூறியவர், இதுவரை 37 குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் சுற்றுப் பயணம்- ஓபிஎஸ் களத்துக்கே வரல, அதுக்குள்ள இப்படியா ? வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!