திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது!!

சென்னையில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். 

AIADMK members arrested for protesting Edappadi Palanisamy arrest in Trichy

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கைதை கண்டித்து  திருச்சி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படும் முதல்வர்.. அவருடன் அரை மணிநேரம் ஸ்டாலின் ரகசிய பேச்சு.. போட்டு தாக்கும் இபிஎஸ்.!

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை  உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன் உட்பட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க;-  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அதிரடி கைது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios