இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் சட்டப்படி செல்லாது.. ஒரே அறிக்கையில் இபிஎஸ் முகாமை அலறவிடும் ஓபிஎஸ்..!
இன்று நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாததால் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாததால் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் சொந்த ஊருக்கு சென்றிருக்கும் நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதில், ஓபிஎஸ்-இபிஎஸ் பெயர் இல்லாமல் தலைமை நிலையச் செயலாளர் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளளது. இந்நிலையில், இன்று நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாததால் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- நீங்க விதியைப் பத்தி கேக்குறீங்க.. நான் கட்சி தலைவிதியை பற்றி கவலைப்படுகிறேன்.. குமுறும் ஓபிஎஸ் ஆதரவாளர்..!
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுக சட்ட, திட்ட விதி 20A(v)-ன் கீழ் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும்.
இதையும் படிங்க;- பாயிண்டை பிடித்த புகழேந்தி.. சி.வி.சண்முகத்தின் அடி மடியிலேயே கை வைத்ததால் அதிர்ச்சி..!
இதையும் படிங்க;- ஆயிரம் சண்முகம் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.. இனிமே தான் ஓபிஎஸ் ஆட்டமே இருக்கு.. கோவை செல்வராஜ்.!
ஆனால், இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், அதிமுக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம் என்ற பெயரில் கட்சியின் சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 27-6-2022 - திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விதியை மீறிகூட்டப்படுள்ள மேற்படி கூட்டம் கழக சட்டம் மற்றும் விதிகளை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம் கழக சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். அதிமுக சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.