நீங்க விதியைப் பத்தி கேக்குறீங்க.. நான் கட்சி தலைவிதியை பற்றி கவலைப்படுகிறேன்.. குமுறும் ஓபிஎஸ் ஆதரவாளர்..!

கட்சியினுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருக்கிற சிலர்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக இருந்திருக்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடிபிரபாகர் தெரிவித்துள்ளார்.

I worry about the fate of the party... jcd prabhakar

கட்சியினுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருக்கிற சிலர்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக இருந்திருக்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடிபிரபாகர் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக ஒ.பன்னீர்செல்வதத்தின் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டிக்கையில்;- இபிஎஸ் - ஓபிஎஸ் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன், ஒற்றை தலைமைக்கு இடம் இல்லை என்று பேட்டியில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி. இப்போது நிர்வாகிகள் இபிஎஸ் பக்கமும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி பொதுக்குழு, செயற்குழுக்கூட்டம் நடந்தது.

இதையும் படிங்க;- ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியவர் இவர்தானா? சிக்கிய பரபரப்பு காட்சிகள்.!

I worry about the fate of the party... jcd prabhakar

 அதிமுக ஓபிஎஸ் - இபிஎஸ் கட்சி அல்ல. தொண்டர்கள் கட்சி. ஓபிஎஸ்க்கு இவ்வளவு பிரச்னை நடத்த போது, இபிஎஸ் ஏன் அமைதியாக இருந்தார்? இபிஎஸ் கண் அசைவுக்கு தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் வரவு செலவு, கணக்குகளை படிக்க அனுமதிக்காதது ஏன்? ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ்-யை திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள். பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச எழுந்தபோது மைக்கை ஆஃப் செய்துவிட்டனர்; ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். கண்ணிய குறைவாக நடந்துகொண்டவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்தாரா? ஒற்றைத் தலைமை என ஏற்கெனவே சொல்லித் தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர். 

I worry about the fate of the party... jcd prabhakar

பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். மேலும் சி.வி.சண்முகம், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி பற்றிய கேள்விக்கு, விதிகள் பற்றி முடிவு எடுக்க வழக்கறிஞர் குழு பார்த்துக்கொள்ளும்; நான் கட்சியின் தலைவிதியை பற்றி கவலைப்படுகிறேன். தேர்தல் ஆணையத்தில் எந்த புகாரும் இதுவரை கொடுக்கவில்லை என ஜே.சி.டி. பிரபாகரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- உட்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள்.. ஐகோர்ட்டுக்கே அட்வைஸ் செய்யும் சி.வி. சண்முகம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios