- Home
- Politics
- இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
கேரளாவில் காங்கிரஸ்- இடதுசாரிகள் எதிரெதிர் அணி, தமிழகத்தில் ஓரணி ஃபார்முலா மாதிரிதான் இதுவும். வழக்கம் போல் கே.சி.வேணுகோபால், தமிழக ரெபெல் டீம் இதன் பின்னணியில் இருப்பதாக சொல்கிறார்கள். இப்படி ஒரு மூவ் இருந்தால் திமுக என்ன செய்யும் என்பது கேள்வி?

‘‘காங்கிரஸ் - தவெகவின் சில முன்னணி தலைவர்கள் அரசியலில் போடும் புதுக்கணக்கா திமுகவுக்கு கையறு நிலை ஏற்படலாம் என ஊடகவியலாளர் அப்துல் முத்தலீஃப் தெரிவித்துள்ளார்.
ஒரு புறம் காங்கிரஸின் ஐவர் குழு திமுகவோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், மற்றொரு புறம் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசி இருப்பது சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் யார் பக்கம்தான்சாயும்? காங்கிரஸ் போடும் கணக்கு என்ன? விஜய் உடனான சந்திப்பு உணர்த்துவது என்ன? என்பது புரியாத புதிராகவே மாறி இருக்கிறது
காங்கிரஸின் ஐவர் குழு அறிவாலய ரூட்டில் சென்று கொண்டிருக்கும்போதே காங்கிரசின் பிரதிநிதி பட்டினப்பாக்கத்தில் விஜய் வீட்டில் முகாமிட்டதுதான் தற்போது திமுக கூட்டணி கூடாரத்தில் ஹாட் டிராபிக். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், தவெக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக சில நாட்களாகவே பேச்சு நிலவி வருகிறது. ராகுல் காந்திக்கும், விஜய்க்கும் இருக்கும் நட்பு வருகிற தேர்தலில் கூட்டணியாக மாறுமா? என்ற விவாதமும் சூடு பிடித்துள்ளது. ஆனால், பீகார் தேர்தலுக்குப் பிறகு இந்த விவாதம் வேறு கோணத்தில் திரும்பி, அங்கு படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருப்பதுதான் நல்லது என சில அரசியல் விமர்சகர்கள் கூற, அதற்கு ஏற்ப திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்தது காங்கிரஸ் மேலிடம்.
இந்த ஐவர் குழு இரண்டு நாட்களுக்கு முன்பாக அறிவாலயம் வந்து முதலமைச்சரை சந்தித்ததோடு காங்கிரஸ் வெற்றி பெறச் சாதகமான 40 தொகுதிகளை கொண்ட பட்டியலை வழங்கியதாக சொல்லப்பட்டது. இந்நிலையி எதிர்பாராத திருப்பமாக ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, பட்டினப்பாக்கம் வீட்டில் வைத்து விஜயை சந்தித்து பேசியதாக தகவல். இரண்டு நாட்களுக்கு முன்பு ஐவர் குழு அறிவாலயம் சென்று வந்த தடம் மாறுவதற்குள் ராகுல் காந்தியின் பிரதிநிதியான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த குழப்பத்தற்கு மத்தியில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த புதிய கோணத்தை பகிர்ந்துள்ளார் ஊடகவியலாளரான அப்துல் முத்தலீஃப். அவர், ‘‘தவெக உடன் காங்கிரஸ் தமிழகத்தில் கூட்டணி வைத்தால் திமுகவுடன் பகை, பெரிதாக ஒன்றும் நடக்காது. ஆனால் தவெக என்.டி.ஏ பக்கம் போனால் மொத்தமாக திமுக அணி சோலி முடிஞ்சிடும்.
அப்படியானால் தவெகவை என்.டி.ஏ பக்கம் போகாமல் தடுப்பது அவசியம். அதற்கு பாண்டிச்சேரியில், கேரளாவில் கூட்டணி என முடிவு செய்தால் விஜய்யை கைக்குள் வைத்துக்கொள்ளலாம். தவெகவுடன் இணைந்து 2031-ல் காங்கிரஸின் லட்சியமான கூட்டணி ஆட்சி நோக்கியும் நகரலாம். இப்படிப்பட்ட எதிர்கால திட்டத்துடன் காங்கிரஸ் இறங்குகிறதோ என தோன்றுகிறது. அதே நேரம் தவெக, என்.டி.ஏ பக்கம் நகர்ந்து விட்டால் காங்கிரஸ் தமிழகத்தில் இப்போதுள்ள நிலையைக்கூட தக்க வைக்க முடியாது. பாஜக காலூன்றும் என்பதும் தெரியும். அதனால் இடைக்கால ஏற்பாடாக பாண்டிச்சேரி, கேரளத்தில் தவெகவுடனும், தமிழகத்தில் திமுகவுடனும் என்கிற டபுள் ஸ்டாண்ட் எடுத்தால்? அனைத்து வகையிலும் காங்கிரஸுக்கு லாபம். இதை கணக்குப்போட்டு காங்கிரஸ் காய் நகர்த்துவதாக பேச்சு அடிபடுகிறது.
கேரளாவில் காங்கிரஸ்- இடதுசாரிகள் எதிரெதிர் அணி, தமிழகத்தில் ஓரணி ஃபார்முலா மாதிரிதான் இதுவும் என்கின்றனர். வழக்கம் போல் கே.சி.வேணுகோபால், தமிழக ரெபெல் டீம் இதன் பின்னணியில் இருப்பதாக சொல்கிறார்கள். இப்படி ஒரு மூவ் இருந்தால் திமுக என்ன செய்யும் என்பது கேள்வி?’’ எனத் தெரிவித்துள்ளார்.
‘‘கேரளா, பாண்டிச்சேரியில் தலைவர் விஜய் வாழ்க என்று சொல்லும் காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் என்ன சொல்வார்கள்..? பொறுத்திருந்து பார்ப்போம்..!
