ஆயிரம் சண்முகம் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.. இனிமே தான் ஓபிஎஸ் ஆட்டமே இருக்கு.. கோவை செல்வராஜ்.!
பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று சண்முகம் கூறியது கேலி கூத்து. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் 11ம் தேதி பொதுக்குழு என்பது கனவாக தான் இருக்கும் நினவாகாது என்றார். தொண்டர்களை சந்திக்கவும் கட்சியை பலபடுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கட்சியை நாங்கள் தான் வழி நடத்துவோம் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். ஓபிஎஸ் இனிமேல் துணிந்து செயல்பட உள்ளார் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச்சாலையில் ஓபிஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ்;- நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என தெரிவித்துள்ளனர். 43வது விதி படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதன்படி இருவரும் முழு அதிகாரம் பெற்றவர்கள் என்றார்.
பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று சண்முகம் கூறியது கேலி கூத்து. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் 11ம் தேதி பொதுக்குழு என்பது கனவாக தான் இருக்கும் நினவாகாது என்றார். தொண்டர்களை சந்திக்கவும் கட்சியை பலபடுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கட்சியை நாங்கள் தான் வழி நடத்துவோம் என்றார்.
தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளர்கள் 1000 கணக்கான தொண்டர்கள் சென்னை வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தான் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒன்றாக தான் அமர வைக்க வேண்டும். ஆனால், நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டார்கள். அரசியல் நாகரிகம் இல்லாமல் அவர்கள் நடந்து கொண்டதாக செல்வராஜ் குற்றம் சாட்டினார்.
ஆட்சியை காப்பாற்ற சொல்லி ஓபிஎஸ் காலில் விழுந்தது யார் என்று தெரியும். பொதுக்குழு குறித்து எந்த வித புகாரும் தேர்தல் ஆணையத்திடம் தரவில்லை. கட்சியை நாங்கள் தான் வழி நடத்துவோம் பிறகு ஏன் நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாட வேண்டும் என கேள்வி எழுப்பினார். அன்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் இன்றும் என்றும் அவர் தான் ஒருங்கிணைப்பாளர் இருப்பார் என கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க;- பாயிண்டை பிடித்த புகழேந்தி.. சி.வி.சண்முகத்தின் அடி மடியிலேயே கை வைத்ததால் அதிர்ச்சி..!