அதிமுக தலைமை அலுவலக வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் கோட்டாட்சியர் கொடுத்த அதிர்ச்சி பதில்..!
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி நடந்தது. அப்போது நீதிபதி அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. அந்த நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
இதையும் படிங்க;- கட்சி பணத்தில் கையாடல் செய்த ஓபிஎஸ்.. அதிமுகவில் அவர் இல்லை.. கோர்ட்டில் பரபரப்பை கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
இதனையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி நடந்தது. அப்போது நீதிபதி அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக அலுவலக அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பகுதில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறையினர் வன்முறை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தியது.
அதேபோல் இந்த வன்முறை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது, வன்முறையை வழக்குகளும் பதியப்பட்டது. மேலும் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கு விவகாரம் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தபடி அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை மாறாக நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- இபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் சசிகலா இணையலாம்..? மூத்த நிர்வாகியின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு