கட்சி பணத்தில் கையாடல் செய்த ஓபிஎஸ்.. அதிமுகவில் அவர் இல்லை.. கோர்ட்டில் பரபரப்பை கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே அசம்பாவிகளை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமறத்தில் மீண்டும் நாளை நடைபெறுகிறது. இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது அதிமுக அலுவலகத்திற்கு உரிமை கூற முடியாது.
மேலும் செய்திகளுக்கு..“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!
பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்க கூடாது. அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வன்முறைகள் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சூழலில் இபிஎஸ்ஸின் இந்த மனு அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !