அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது. மக்களிடையே யார் பிளவை ஏற்படுத்த விரும்பினாலும் அது முறியடிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல்லை இன்று நாட்டினார். இதன்பின்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி;- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 22 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ கல்லூரி அமைகிறது. ராமநாதபுரத்தில் சுகாதார துறையில் 10 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க;-  சிஏஏவுக்கு எதிராக அலைக்கடலென குவிந்த மக்கள்... அதிமுக, பாஜகவை அலறவிட்ட தமிமுன் அன்சாரி..!

தமிழக மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 1,650 இடங்கள் பெறப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.