Asianet News Tamil

சிஏஏவுக்கு எதிராக அலைக்கடலென குவிந்த மக்கள்... அதிமுக, பாஜகவை அலறவிட்ட தமிமுன் அன்சாரி..!

கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான "வாழ்வுரிமை மாநாடு" பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி.ராஜா, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

CAA protest Conference...AIADMK, BJP screams tamil mun ansari
Author
Coimbatore, First Published Mar 1, 2020, 1:38 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கோவையே குலுங்கும் அளவிற்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டதை கண்டு மத்திய, மாநில அரசுகள் அதிர்ந்து போயியுள்ளன. 

கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான "வாழ்வுரிமை மாநாடு" பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி.ராஜா, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த மாநாட்டு திடலுக்கு "காந்திஜி" அவர்களின் பெயரும், மாநாட்டு மேடைக்கு குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான டெல்லி ஷாஹின் பாக் போராட்டக்களத்தில் குளிரால் உயிர் நீத்த "தியாக குழந்தை " ஜஹானாரா வின் பெயரும் பிரதான நுழைவாயிலுக்கு நீதியரசர் ராஜேந்திர சச்சார் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டு இருந்தது.

இதுபோல் பெண்கள் நுழைவாயிலுக்கு காஷ்மீரில் மதவெறியர்களால் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபாவின் பெயரும், மற்றொரு நுழைவாயிலுக்கு பாசிஸ்டுகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் கெளரி லங்கேஷ் மற்றும் காவி பயங்கரவாததிற்கு எதிராகப் போராடி உயிர்நீத்த மராட்டிய முன்னாள் டிஜிபி ஹேமந்த் கர்கரே ஆகியோரின் பெயரும் சூட்டப்பட்டு இருந்தது. இவையாவும் சங்கிலிகளின் பயங்கரவாதத்தை தோலுரிப்பதாக அமைந்தது.செம்மொழி மாநாடு நடைப்பெற்ற கொடிசிய மைதானத்தைத்தில் தான் இம்மாநாடு நடைப்பெற்று சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. திடலை சுற்றிலும் இரண்டாயித்திற்கும் அதிகமான வாகனங்கள் குழுமியதால் கோவை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மாநாட்டு திடலில் கட்சியின் கொடியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் ஏற்ற அதன் பிறகு பொருளாளர் ஹாருண் ரசீது முழக்கங்களை எழுப்பி மாநாட்டை தொடங்கி வைத்தார்.  இரவு 8 மணியளவில் மாநாட்டு திடலில் அமர்ந்து இருந்த அனைத்து மக்களும் எழுந்து தங்களது செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு டெல்லியில் கலவரத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்வு காண்போர் அனைவரையும் உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தியது. எங்கும் ஒளிமயமாய் உருக்கமாக மாறியது.

 மேடையின் பின்புறம் இருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் திரை இதை ஒளிபரப்பிய போது அதன் பிரம்மாண்டம் மிரள வைத்தது எனலாம். தென்னிந்தியாவில் ஒரே இடத்தில் இது போன்ற ஒளி வழி எதிர்ப்பு திரட்டப்பட்டது இங்கு தான் என பலரும் குறிப்பிட்டனர். மாநாட்டு நிகழ்வில் இடையிடையே மாணவர் இந்தியாவின் சார்பில் முழங்கங்கள் எழுப்பப்பட்டது.  அது கூட்டத்தை எழுந்து நின்று எழுச்சிக் கொள்ள செய்தது. பெண்கள் உள்ளிட்ட மக்கள் ஆவேசமாய் முழக்கங்களை எதிரொலிக்க அது போர் குரல்களாக மாறியது. இதில் மக்களையும், திடலையும் இளைஞர் அணியினர் கட்டுக்கோப்பாக வழிநடத்தினர்.

நிகழ்ச்சியினை துணைப்பொதுச்செயலாளர் தைமிய்யா தொகுத்து வழங்கினார். துணைப்பொதுச்செயலாளர் செய்யது முஹம்மது பாருக் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார். டிசம்பர் 12 அன்று தமிழகத்தில் முதன் முறையாக குடியுரிமை சட்டத்திற்கு  எதிராக மஜக தான் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நகல் கிழிப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தது. அதன் பிறகு பேரணிகள், ஆர்ப்பாட்டம் மண்டல, மாவட்ட கூட்டங்கள் என பலரும் இதை வலிமைப்படுத்தினர். ஆனால் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக முதல் முதலாக மாநாடு நடத்தி அரிய கள சாதனையை உற்சாகமாக செய்து மஜக முடித்திருக்கிறது என பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார். அவர் சகோதர அமைப்புகள் ஜமாத்துகள், தமிழ் உணர்வு அமைப்புகளின் ஒத்துழைப்புக்கும்  நன்றி கூற தவறவில்லை.

மாநாடு பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தது. மேடையின் மிரம்மாண்டமும், திடலின் ஏற்பாடுகளும் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுக்கு இணையான பிம்பத்தை உருவாக்கியிருந்தது. புத்தக கடைகள், உணவு கடைகள், டாய்லட் வசதிகள், குடிநீர் வசதிகள், வழிபாட்டு பகுதிகள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்து, முஸ்லிம், கிறித்தவ, சீக்கிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரிக்கும் படங்களுடன் "இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்" என்ற 80 அடி நீள பேனர் மேடையின் முன்பகுதியில் தொங்க விடப்பட்டது. அது காண்போரை பரவசப்படுத்தியது. அது போல் திடலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களில், பூலித்தேவர், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள்  போன்ற மன்னர்களின் தியாகங்களும், காந்தி, அம்பேத்கார், பசும்பொன் தேவர், காமராஜர், காயிதே மில்லத் போன்றோரின் கருத்துகளும் படங்களுடன் வரையப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை, விசிக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர் வருகை தந்தனர். இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேசிய கீதத்துடன் மாநாடு நிறைவுற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios