தென்மாவட்டத்தில் எதிர்ப்பா? தைரியமாக களம் இறங்கும் பழனிசாமி; தேவர் குருபூஜையில் பங்கேற்பதாக அறிவிப்பு
தென்மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், வருகின்ற 30ம் தேதி தேவர் குருபூஜையில் பழனிசாமி பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவரான தேவர் திருமகனாரின் 116வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்ட 30 - 10 - 2023 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், எம்ஜிஆர் மற்றம், புரட்சித் தலைவி பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக வருகை தந்து மரியாதை செலுத்துமாறு கேட்டுள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரம்; 100 நாட்களில் 10 ஆயிரம் கொடி கம்பம் - அரசுக்கு அண்ணாமலை சவால்
அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவர சார்ந்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மதுரை, ராமநாதபும், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் வருகின்ற 30ம் தேதி தேவர் குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D