எங்க மதிப்பு என்னனு தெரியாம அண்ணாமலை லேகியம் விற்குற மாதிரி பேசிட்டு இருக்காரு; ஆர்.பி.உதயகுமார் காட்டம்

அதிமுகவின் மதிப்பு தெரியாமல் லேகியம் விற்பவர் போல அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

aiadmk former minister rb udhayakumar slams bjp state president annamalai in madurai vel

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மதுரையில் பொன்னாடை அணிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் அளித்த பேட்டியில், “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, "ஓ.பன்னீர்செல்வத்திற்கு மன குழப்பம் உள்ளது. அவருக்கு மூளை குழம்பியுள்ளது. அவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

கிளாம்பாக்கத்தில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்; மத்திய அரசின் நிதி பகிர்வு குறித்து மக்களுக்கு விளக்கம்

நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர் பாவம். திடீரென பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளாகி, நிராயுதபாணியாக உள்ளார். கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது.

நீங்க என்னடா எங்க முன்னாடியே உக்காந்து சாப்பிடுறீங்க? புதுக்கோட்டை கோவிலில் நிகழ்ந்த சாதிய வன்கொடுமை

அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலர் கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை. தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசி கொண்டிருக்கிறார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது. 

பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது தம்பி. நாங்கள் பேச ஆரம்பித்தால் வேஷ்டியை கழட்டி விட்டு நீ ஓடி விட வேண்டும். கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios