ஏன்டா திமுகவுக்கு ஓட்டு போட்டோம்னு மக்கள் ஃபீல் பன்றாங்க தெரியுமா ? மீண்டும் ஃபார்முக்கு வந்த கே.டி.ஆர் !
மின்வெட்டு வாடிக்கையாகி விடுகிறது. திமுகவுக்கு வாக்களித்ததற்குப் பொதுமக்கள் தற்போது வேதனைப்படுகின்றனர். வெட்கப்படுகின்றனர். திமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும். திமுகவால் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் மா.செ கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கே.டி ராஜேந்திர பாலாஜி, ‘ஜனநாயக முறைப்படி அதிமுகவில் கழக அமைப்புத் தேர்தல் நடக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், அதற்கு மத்திய அரசைக் குறை கூறி, காலம் கடத்தும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபடுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டைத் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். மின்வெட்டு பிரச்சனையில் திமுக அரசு திணறுகிறது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் விலைவாசி உயர்கிறது.மின்வெட்டு வாடிக்கையாகி விடுகிறது. திமுகவுக்கு வாக்களித்ததற்குப் பொதுமக்கள் தற்போது வேதனைப்படுகின்றனர். வெட்கப்படுகின்றனர்.
திமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும். திமுகவால் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது. அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக தான் இன்று ஆளுங்கட்சியாக மக்கள் பணியாற்றுகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்’ என்று பேசினார்.