“அரசியல் அமாவாசை கேகேஎஸ்எஸ்ஆர்” சாத்தூரில் அதிமுகவினர் ஆர்பாட்டம்
சாத்தூரில் தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை கண்டித்து அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று அமை்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாத்தூர் நகர் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அதிமுகவினரின் ஆர்பாட்டத்திற்கு அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அதனால் இன்று காலையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நகர் காவல் நிலையம் அருகில் கூட்டமாக கூடினர்.
நியாயவிலைக் கடைகளில் இனி கைரேகை வைக்க தேவை இல்லை; புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
அதன் பின்னர் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பிரதான சாலை வழியாக வருவாய் துறை அமைச்சரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வடக்கு ரத வீதி வழியாக சென்றனர். அமைச்சரை கண்டித்து அரசியல் அமாவாசையே ஒழிக என்று கண்டன கோஷம் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட செயலாளரார் ரவிச்சந்திரன், தற்போது தமிழக வருவாய் துறை அமைச்சராக இருக்கும் ராமச்சந்திரன் அதிமுக தொண்டர்களால் வழி காட்டப்பட்டு இந்த பதவிக்கு வந்துள்ளார்.
உறுப்புகளை தானமாக வழங்கி இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை
அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வழக்கு ஒன்றில் இருந்து தப்பிக்க ஜெயலலிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவர் ராமச்சந்திரன். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், முதல்மைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும் அம்மாவை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு பணியையும் செய்யாமல் மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு அவதூறு பேசி வருகிறார். இனிமேல் இவ்வாறு பேசினால் பெரிய அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.