பெரியார், அண்ணாவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது - முனுசாமி காட்டம்
ராணிப்பேட்டையில் அதிமுக மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பேசிய கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனிசாமி பேசுகையில் ஒபிஎஸ் அரசியலில் காணாமல் போன நபர் என பேச்சு.
ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழகத்தின் கட்சி தலைமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அலுவலகத்தில் அதிமுக கட்சி கொடியை ஏற்றி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தி கட்சியின் தலைமை அலுவலகத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் அரசியலில் காணாமல் போன நபர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருக்கிறது. சமூக விரோதிகள் பயன்படுத்தக்கூடிய கஞ்சா, சாராயம் போன்ற பொருட்கள் சாதாரணமாக தமிழகத்தில் கிடைக்கப்படுவதால் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் தமிழகத்தில் வழிப்பறி மற்றும் ஆதாய கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் எளிதில் தப்பிக்கக்கூடிய அளவிற்கு சட்ட ஒழுங்கு இருப்பதல் பொதுமக்கள் சாலையில் நடமாடுவதற்கு கூட அஞ்சுகின்றனர்.
சரணம் ஐயப்பா கோஷம் முழங்க பரவசத்துடன் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுபிள்ளைத்தனமாக கருத்துக்களை பரப்பி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குகளை அபகரிப்பதற்காக பொய்யான வாக்குறுதியை தவறாக அளித்து இருக்கின்றனர்.
அதிமுக கட்சி ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநரிடம் வழங்கப்பட்டு இருப்பதை போலவே, திமுகவும் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வேன் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழகத்தில் 50 லட்சம் மக்களிடம் கையெழுத்தினை பெற்று நீட் தேர்வை ரத்து செய்ய போவதாக மக்களை ஏமாற்றி வருகிறார்.
திராவிட கட்சிகளின் தலைவர்களை பற்றி வரலாறு தெரியாமல் பேசி வரும் பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகம் அனைத்து பிரிவுகளிலும் முதல் மாநிலமாக விளங்குவதற்கு 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம். இதை பற்றி எல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை. ஊடகங்கள் மத்தியில் வரலாறு பேசுவதாக கூறி தவறானதை பேசி வருகிறார். பெரியார் மற்றும் அண்ணாவை போன்று தலைவர்களை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எவ்வித தார்மீக அருகதையும் கிடையாது என பேசினார்.