கோவையில் திமுக செல்லா காசாக உள்ளது. சாதாரண தொண்டர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்கின்றனர். இதனால் அதிமுகவினர் பயந்து விடுவார்கள் என நினைக்கின்றனர். ஆனால். நாங்கள் எந்த சோதனைக்கு பயப்படமாட்டோம். வீழ்ந்து விடவும் மாட்டோம். 

எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தியாக இருப்பதால் அதை உடைக்க இது போன்ற சோதனைகளை ஆளுங்கட்சி செய்து வருவதா அம்மன் அர்ச்சுனன் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலுமணி வீட்டில் ரெய்டு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. அவர் ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல் புகாரை அடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் ரொக்கம் கைப்பற்றப்பட்டதையடுத்து எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது. 

இதையும் படிங்க;- AIADMK: வீரத்துடன் எதிர்த்துப் போராடிய வேலுமணியை முடக்கிப் போடவே ரெய்டு.. எதற்கும் அஞ்சமாட்டோம்.. OPS, EPS..!

இந்நிலையில், நேற்று காலை எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத ரூ. 84 லட்சம் ரொக்கம், கைப்பேசிகள், வங்கி லாக்கர் சாவிகள், மடி கணினி, ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ரூ. 34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அம்மன் அர்ச்சுனன் பேட்டி

இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இந்த பிரச்சனையை மறைப்பதற்காகவே லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தியாக இருப்பதால் அதை உடைக்க இது போன்ற சோதனைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கோவையின் மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கும் தெரியும். அந்த பிம்பத்தினை உடைப்பதற்காக இதுபோன்று லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க;- கல்வித்துறையில் கார்ப்பரேட் நிறுவனத்தை நுழைப்பதா? எங்கே போனார் திருமா, வைகோ? போட்டு தாக்கும் பாஜக.!

கோவையில் திமுக செல்லா காசு

கோவையில் திமுக செல்லா காசாக உள்ளது. சாதாரண தொண்டர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்கின்றனர். இதனால் அதிமுகவினர் பயந்து விடுவார்கள் என நினைக்கின்றனர். ஆனால். நாங்கள் எந்த சோதனைக்கு பயப்படமாட்டோம். வீழ்ந்து விடவும் மாட்டோம். அதிமுகவை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்களே வீழ்ந்து போவார்கள் என தெரிவித்துள்ளார்.