இது பார்ப்பனீயத்தை புகுத்த பார்க்கும் சதி என்றும் சனாதனத்தை நுழைக்கும் வழி என்றும் வீரமணியும், திருமாவளவனும் விமர்சிப்பார்களே? மத்திய பாஜக அரசின் திட்டங்களை அமல்படுத்தும் அடிமை திமுக அரசு என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்களே தமிழ் போராளிகள்? வைகோ போராட்டம் நடத்துவாரே?

கல்வித்துறையை மேம்படுத்த தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் 

பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த Cognizant நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுகவின் இந்த செயலுக்கு பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- அரசியல் படுகொலைகளை தினந்தோறும் அரங்கேற்றும் கம்யூனிஸ்ட்? கோரப்பிடியில் அப்பாவிகள்.. கொதிக்கும் பாஜக.!

நாராயணன் திருப்பதி கண்டனம் 

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- என்ன!!!!! தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமா? கல்வித்துறையில் கார்ப்பரேட் நிறுவனத்தை நுழைப்பதா? ஐயோ, இது நியாயமா? நீதியா? இது அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி இல்லையா? தேசிய கல்வி கொள்கையின் வழிகாட்டுதல் படி இந்த திட்டம் புகுத்தப்படுகிறது என்றெல்லாம் கண்டிப்பார்களே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சியினர்?

திமுக கூட்டணியை விளாசும் பாஜக

இது பார்ப்பனீயத்தை புகுத்த பார்க்கும் சதி என்றும் சனாதனத்தை நுழைக்கும் வழி என்றும் வீரமணியும், திருமாவளவனும் விமர்சிப்பார்களே? மத்திய பாஜக அரசின் திட்டங்களை அமல்படுத்தும் அடிமை திமுக அரசு என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்களே தமிழ் போராளிகள்? வைகோ போராட்டம் நடத்துவாரே? கம்மிகள் உண்ணாவிரதம் இருப்பார்களே? என்ன சொல்லப்போகிறாரோ தமிழக முதல்வர்? என்ன செய்யபோகிறதோ தமிழக அரசு? 'தனியார் மயமாகிறதா தமிழக கல்வி துறை' என்ற தலைப்பில் ஊடகங்கள் இது குறித்து விவாதம் செய்யுமா? தொலைக்காட்சியில் வரும் கல்வியாளர்கள் கொதித்தெழுவார்களா? பெரும் குழப்பம் வந்து விடும் போல் தெரிகிறதே? என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- DMK வட்டச் செயலாளரை செதில் செதிலாக வெட்டிய கூலிப்படை தலைவன் கைது.. சட்டையை பிடித்து அலேக்காக தூக்கிய தனிப்படை