சசிகலா,டிடிவி தினகரன் மட்டுமல்ல.. எடப்பாடி குரூப்பில் ஸ்லீப்பர் செல்.!! ஓபிஎஸ் சொன்ன சீக்ரெட்!
தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈபிஎஸ் தரப்பால் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார்.ஐகோர்ட் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!
இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பு, வரும் வாரம் வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!
இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும் பலர் தன் பக்கம் வர உள்ளார்கள். அது யார் என்பது பரம ரகசியம். ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையை முழுமையாக படித்த பின்பு தான் கருத்து சொல்ல முடியும். கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !