மதுரை அண்ணா தொழிற்சங்க மாநில இணைச் செயலாளராக உள்ளவர் பரமானந்தம். இவர் மதுரை ஆவின் பால் அலுவலகத்தில் ஓட்டுனராக  வேலை பார்த்து வந்துள்ளார். ஆவின் பணியாளர் கூட்டுறவு சங்க தலைவராக உள்ளவர் பாண்டி. இவர்கள் இருவரும் ஆவின் அலுவலகத்தில் கான்டராக்ட்டில் வேலைபார்க்கும் பெண்களை ஊழியர்களிடம் உங்களை நிரந்தரமாக்கி விடுகின்றோம் எனக் கூறி ஆவின் கெஸ்ட் அவுஸில் வைத்தே உல்லாசத்தில் ஈடுபட்டு வருவதாக  வீடியோ  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்த வீடியோவில், சின்ன பெண்கள்  உள்ளிட்ட பல பெண்களுடன் இருவரும் மாறி மாறி உல்லாசமாக  இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.  இந்த கசமுசா வீடியோ விவகாரம் ஆவின் பால் பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர்களோ வீடியோவில் இடம் பெற்றிருப்பது கிராபிக்ஸ். வீடியோ போலியானது அதில் இருப்பது நாங்கள் இல்லை. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. வேண்டுமென்றே எங்களை பழிவாங்க செய்துள்ளார்கள் என போலீசாரிடம் கூறியுள்ளனர்.  

அதுமட்டுமல்ல, இது முன்னரே எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும் வீடியோவில் உள்ள பெண்களிடம் போலீஸார் முன்னரே விசாரணை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், வீடியோ எடுத்தவர்கள் விவசாரம் வெளியாகவில்லை.