சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது மனைவியுடன் இயற்கை அழகை ரசிக்கும் ரம்மியமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரையில், 51 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. சென்னையில் நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Scroll to load tweet…

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். மேலும், மதீஷா பதிரனா மற்றும் மகீஷ் தீக்‌ஷனா இருவரும் டி20 உலகக் கோப்பை விசா பிரச்சனை காரணமாக தாயகம் சென்றனர்.

ஆதலால், இருவருமே இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது, 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தர்மசாலாவில் நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தர்மசாலாவில் வந்துள்ளன. இதில், கடந்த போட்டியில் இடம் பெறாமலிருந்த பதிரனா மற்றும் தீக்‌ஷனா இருவரும் இந்தப் போட்டியில் இடம் பெற இருக்கின்றனர். இதற்காக இருவரும் அணியுடன் இணைந்துள்ளனர். சிஎஸ்கே வீரர்களுடன் விமான நிலையத்தில் நடந்து வரும் தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் சிஎஸ்கேயின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தனது மனைவி உட்கர்ஷா பவார் உடன் தர்மசாலா சென்றுள்ளார்.

அங்கு தர்மசாலா இயற்கை அழகை ரசிக்கும் புகைப்பட காட்சியான வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், இருவரும் கன்னத்தை ஒன்றாக வைத்து போஸ் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பின்புறம் தர்மசாலா மலையின் அழகு பார்க்க அழகாக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…