Asianet News TamilAsianet News Tamil

மாஜி மணிகண்டன் வீட்டி வாசலில் நின்று கதறிய நடிகை சாந்தினி.. எட்டி எட்டி உதைத்த உறவினர்கள்.. பயங்கர பரபரப்பு.

வழக்கை வாபஸ் வாங்க சொல்லிவிட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகி விட்டதாக கூறி அவரின் வீட்டு வாசலில் துணை நடிகை சாந்தினி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Actress Shantini Dharna at Manikandan's doorstep..Relatives attacked..
Author
First Published Oct 14, 2022, 2:43 PM IST

வழக்கை வாபஸ் வாங்க சொல்லிவிட்டு முன்னாள் அமைச்சர்  மணிகண்டன் தலைமறைவாகி விட்டதாக கூறி அவரின் வீட்டு வாசலில் துணை நடிகை சாந்தினி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிகண்டனின் பெற்றோர் வசிக்கும் ராமநாதபுரம்  வீட்டிற்கு சென்ற சாந்தினியை மணிகண்டனின் உறவினர்கள் எட்டி உதைத்து தாக்கியதால் அங்கு பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actress Shantini Dharna at Manikandan's doorstep..Relatives attacked..

இதையும் படியுங்கள்: ஓ.பி.ரவீந்திரநாத்தை கைது செய்ய வேண்டும்.! தங்க தமிழ் செல்வன் புகார் மனுவால் பரபரப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர்மீது திரைப்பட நடிகை சாந்தினி என்பவர் கடந்த ஆண்டு புகார் கொடுத்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மணிகண்டனுடன் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாக மூன்று முறை கர்ப்பம் ஆனதாகவும் ஆனால் மூன்று முறையும் கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும், முன்னதாக திருமணம் செய்து கொள்வதாக கூறிய மணிகண்டன் பிறகு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதனையடுத்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்..!

இதனை அடுத்து அவர் ஜாமினில் வெளியில் வந்தார். ஆனாலும் இது தொடர்பான வழக்கு  சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் திடீரென இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சாந்தினி கூறினார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவரை கண்டித்ததுடன், ஒருவேளை இப்போது மணிகண்டன் உங்கள் மீது தன் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர். இந்நிலையில்தான் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள மணிகண்டனின் பெற்றோர்கள் வீட்டின் முன்பு சாந்தினி இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Actress Shantini Dharna at Manikandan's doorstep..Relatives attacked..

அப்போது அவரது உறவினர்கள் அவரை காலால் எட்டி எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் காயமடைந்த சாந்தினி கடந்த நான்கு மாதங்களாக இருவரின் நலன்கருதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம், எனது வாழ்க்கையை அவர் நாசம் செய்ததை அவரே ஒப்புக்கொண்டார். எனக்கு செட்டில்மெண்ட் செய்வதாக கூறினார். அந்த அடிப்படையில்தான் நான் வழக்கைத் திரும்பப் பெற்றேன், வழக்கை வாபஸ் வாங்கிய மறுநாளே மணிகண்டன் மாயமானார். மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கு தேடியும் கிணைக்க வில்லை. 

இந்நிலையில்தான் அவர் மதுரையில் இருப்பதை அறிந்து வந்தேன். ராமநாதபுரம் அவர் வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் இங்கு வந்த நிலையில் தான் அவரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் என்னை தாக்கி விரட்டியடித்தனர். எனக்கு நீதி கிடைக்கும் வரை கொண்டு நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறினார். இந்நிலையில் சாந்தினி மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios