தைரியம் இருந்தால்,திராணி இருந்தால் இங்கே வந்து பேசுங்கள்!பிரச்சாரத்தில் வாக்காளருடன் மோதிக்கொண்ட திமுக எம்எல்ஏ

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சென்ற திருவள்ளூர் எம்எல்ஏ வுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தைரியமாக இருந்தால் திராணி இருந்தால் இங்கே வந்து பேசுங்க திமுக சட்டமன்ற உறுப்பினர் சவால் விட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

A public argument with a DMK MLA during the election campaign created a sensation KAK

வாக்கு சேகரிப்பில் வாக்குவாதம்

திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்  செந்தில் இன்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து உளுந்தை கிராமத்தில் வாக்கு சேகரிக்க வேட்பாளர் சசிகாந்த் செந்திலுடன் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியை நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் பேச ஆரம்பித்தபோது, எம்எல்ஏவாக இருந்து நீங்கள் என்ன செய்தீர்கள்? எதுவுமே  செய்யாத எப்படி இங்கு ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என ஆவேசத்துடன் கேட்க ஆரம்பித்தனர். 

A public argument with a DMK MLA during the election campaign created a sensation KAK

பொதுமக்களுடன் மோதிக்கொண்ட திமுக எம்எல்ஏ

இதனால் கோபமடைந்த எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன், தைரியம் இருந்தால், திராணி இருந்தால் இங்கே வந்து பேசுங்கள்... என சொல்லியபடி இந்த சாலையை போட்டது நாங்கள் தான் இந்த டேங்க்கை கட்டிக் கொடுத்தது நாங்கள் தான் என்று தெரிவித்தார். மகளிர் பேசிக் கொண்டே இருந்தார்.

 

ஆனால் பொதுமக்கள்,  ஊர் தலைவருக்கு ஒரு பிரச்சனை வந்த போது ஏன் நீங்கள் அதில் தலையிடாமல் இருந்துவிட்டு இப்பொழுது எப்படி ஓட்டு கேட்க நீங்கள் வரலாம் என ஆவேசமாக  பேசவே அங்கிருந்து புறப்பட்டனர். இருப்பினும் திமுக ஆதரவாளர்கள் கிராமத்தில் எதிர்த்து குரல் கொடுத்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை.! இது தான் காரணம் .? அன்புமணி கொடுத்த புதிய விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios